அடுத்த 3 மணி நேரத்தில்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

மிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.