அடுத்த 3 மணி நேரத்தில்.. இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் கவனத்திற்கு! பிளஸ் 2 மாணவர்களுக்கு இது கட்டாயம்..!!

இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யகூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு! தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு!!

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.