அடுத்த 12 மணி நேரத்தில்! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு… வானிலை மையம் எச்சரிக்கை..!!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை நிலவக்கூடிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு பகுதியில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பின்னர் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்பதால் வருகின்ற டிச.25-ம் தேதி தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

வாட்ஸ் ஆப் பயனாளர்களே உஷார்!! 37.16 லட்சம் கணக்குகள் முடக்கம்.!!

இதன் காரணமாக மீனவர்கள் டிச.25-ம் தேதி வரையில் தென்மேற்கு ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல் தென் தமிழக மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

அம்பேத்கரை அவமதித்த விவகாரம்: நிர்வாகி மீது குண்டாஸ்..!!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.