”வாரிசு” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில்! இன்று வெளியீடு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தினை இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். அதே சமயம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் உருவாகிறது.

varisu movie release date

அதே போல் நடிகை ராஷ்மிகா, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு, சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

வருகின்ற 2023 பொங்கலுக்கு இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

vijay varisu movie exclusive update from sarathkumar photos pictures stills 1

இந்த சூழலில் வாரிசு படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி, ‘வாரிசு’ படத்தின் FIRST SINGLE PROMO இன்று மாலை 6.30 மணிக்கு வெளியீடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.