Connect with us

வேற லெவல்..! ஷங்கர் படத்திற்கு வசனம் எழுதிய எம்.பி. சு. வெங்கடேசன்..

வெங்கடேசன்

பொழுதுபோக்கு

வேற லெவல்..! ஷங்கர் படத்திற்கு வசனம் எழுதிய எம்.பி. சு. வெங்கடேசன்..

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான எம்.பி. சு. வெங்கடேசன் வசனம் எழுதி இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தெலுங்கு நட்சத்திரமான ராம்சரணனின் 15-வது படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. சு. வெங்கடேசன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

குறிப்பாக இப்படப்பிடிப்பின் தொடக்க விழாவிலும் அவர் கலந்துகொண்டு இருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனால் அந்த படத்திற்கு அவர் வசனம் எழுதியதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top