நடிகைகளுக்கு ரூ.20 கோடி செலவு..!! மோசடி மன்னன் சுகேஷ் வழக்கில் திருப்பம்!!

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகைகளுக்கு ரூ.20 கோடி செலவு செய்ததும், நடிகை ஸ்ரீதேவி மகளுக்கு தூது விட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர் மனைவியிடம் ரூபாய் 200 கோடி மோசடி செய்தது உட்பட, 15 வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்நிலையில் அவரிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகைகள் மற்றும் மாடலிங் பெண்களுடன் விருப்பம் கொண்டிருந்த சுகேஷ், நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து நிகிதா தம்போலி, சாகத் கன்னா, சோபியா சிங் மற்றும் அருஷா பாட்டீல் ஆகிய 4 நடிகைகள் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதே போல் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருக்கு சுரேஷ் அழைப்பு விடுத்திருந்தது தெரியவந்தது. ஆனால் இவர் சிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment