பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில் பாதை திட்டங்களுக்கு வெறும்1000 ரூபாய் மட்டுமே நிதி..!

நேற்று முந்தைய தினம் இந்தியாவில் 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரயில்வே துறைக்கு 1.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தமிழக ரயில்வே துறைக்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக மொத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு பாமக நிறுவனர் வன்மையாக கண்டித்து இருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் இது தமிழகத்தின் வளர்ச்சிக்கான அநீதி என்றும் அவர் குற்றசாட்டை வைத்திருந்தார். தமிழகத்தில் உள்ள 8 ரயில் பாதை இடங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே நிதியாக ஒதுக்கப்பட்டது பலருக்கும் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

அதன்படி திண்டிவனம் தொடங்கி நகரி, திண்டிவனம் முதல் திருவண்ணாமலை, ஈரோடு முதல் பழனி ஆகிய ரயில் பாதை திட்டங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி முதல் மொரப்பூர், சென்னை முதல் மாமல்லபுரம்-கடலூர்- அத்திப்பட்டு-புத்தூர் ரயில் பாதை திட்டங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை-அருப்புக்கோட்டை, தர்மபுரி-மொரப்பூர், ஸ்ரீபெரும்புதூர்கூடுவாஞ்சேரி ரயில் பாதை திட்டங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரயில்வே நிதி ஒதுக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் புறக்கணிப்பு நிகழ்ந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ரயில்வே பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததால் தமிழக மக்கள் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment