அதிமுக உட்கட்சி தேர்தல் வழக்கில் திடீர் திருப்பம்!!

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்து தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதற்கட்டமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மற்ற பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உட்கட்சி தேர்தல் செல்லாது என்றும் கட்சியின் விதிகளுக்கு முரணாக தேர்தல் நடைபெற்றதாக வழக்கறிஞர் ராம்குமார், சுரேஷ் ஆகியோர் உரிமையியல் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

அதன் படி, கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி தனிநீதிபதி அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை அமர்வனாது இன்று வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கட்சியின் உறுப்பினர்கள் இல்லாதவர்கள் வழக்கு தொடர்வதற்கு உரிமையில்லை என வாதிட்டார். அப்போது பேசிய நீதிபதி தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment