Connect with us

தமிழகத்தில் ஓரிரு நாளில் மின்தடை என்ற பேச்சிருக்காது..! அமைச்சர் செந்தில்பாலாஜி…

senthilbalaji7 1637080582

தமிழகம்

தமிழகத்தில் ஓரிரு நாளில் மின்தடை என்ற பேச்சிருக்காது..! அமைச்சர் செந்தில்பாலாஜி…

தமிழகத்தில் ஓரிரு நாளில் மின்தடை என்ற பேச்சிருக்காது..! அமைச்சர் செந்தில்பாலாஜி…

தமிழகத்தில் மத்திய அரசு வழங்கி வரும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி போன்ற அனல்மின் நிலையங்களின் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின்தடை என்ற பேச்சே இருக்காது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.  சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.

தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்சார உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாக கூறினார். இதனால் வெளி மாநிலங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

அதோடு வெளி மாநிலங்களிடம்  கூடுதல் மின்சாரம் வாங்க முடிவு செய்திருப்பாகவும் நிலக்கரியை எடுத்து வருவதில் காலதாமதம் ஏற்படுவதால் மத்திய தொகுப்பு மின்சாரம் கிடைக்காதது மின்தடைக்கு காரணம் என தெரிவித்தார்.

மேலும், நாளோன்றுக்கு 72ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது இருப்பு குறைந்துள்ளதால் மின்தடைக்கு காரணம் என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top