
தமிழகம்
என்ன சொல்றீங்க…!!! தமிழகத்தில் தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா? – மா.சுப்பிரமணியன்
தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய குரங்கு அம்மை நோயானது ஐரோப்பிய கண்டங்களில் பரவி உலகம் முழுவதும் சுமார் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.
இதன் எதிரொலியாக இந்தியாவில் நான்கு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுமென கடந்த சில தினங்களுக்கு முன் கூறி இருந்தது.
இந்த சூழலில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது விறுவிறுப்பாக தொடங்க இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வருவோர்களிடம் குரங்கம்மை பாதிப்பு ஏற்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதோடு செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
