News
இனி தமிழகத்தில் தமிழருக்கு மட்டுமே அரசுப் பணி!பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவது தவிர்க்கப்படும்!!
தற்போது உள்ள காலகட்டத்தில் பல இளைஞர்கள் பட்டதாரி களாகவும் உள்ளனர். ஆனால் பட்டதாரிகளாக உள்ள இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் பெரும் சோகத்தை உருவாக்குகிறது. இதனால் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகிறது. பெரும்பாலான கொள்ளை சம்பவங்கள் இளைஞர்கள் ஈடுபடுவது தற்போது காணப்படுகிறது. மேலும் நம் தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாக வடமாநிலத்தவர் அனைவரும் பல்வேறு அரசு பணிகளில் பாஸ் செய்ததாக காணப்பட்டது.
இவை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் தமிழ் மொழி இல்லாத போதிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தமிழகத்தில் தமிழர் இன்றி மற்ற மாநிலத்திற்கு அரசு பணி வழங்க கூடாது என்று போராட்டங்கள் நடைபெற்றது இதன் விளைவாக தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் தமிழருக்கு மட்டுமே பணி என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழர்களைத் தவிர பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதை ஆய்வு செய்து அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டது தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் அளித்துள்ளார் மேலும் கடந்த பத்தாண்டுகளில் எப்படி பணி வழங்கினார்கள் என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
