Connect with us

புதுக்கோட்டையில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி: பீதியில் பொதுமக்கள்!!!

Tamil News large 3084104

தமிழகம்

புதுக்கோட்டையில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி: பீதியில் பொதுமக்கள்!!!

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த புதுக்கோட்டையை சேர்ந்தவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவரது மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டனர்.

புதுக்கோட்டையை சேர்ந்த அரிமளம் பகுதியை சேர்ந்த 35 வயதான நபர் சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சி விமானம் வந்தடைந்தார்.

அங்கு அவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள்  தென்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே புதுக்கோட்டை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்  அவரது  ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் இதுவரையில் குரங்கு அம்மைக்கான தொற்று உறுதியாகாத நிலையில் தற்போது ஒருவருக்கு பாதிப்பு அறிகுறி தென்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top