அரசியலில் இது சாதாரணமப்பா! நாங்கள் தரக்குறைவாக பேசினோம் என்று திமுக சொல்ல தகுதியே இல்லை!!-சீமான்;

ஓரிரு நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது நாம் தமிழர் கட்சியின் சிறப்பு பேச்சாளர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று திமுக நிர்வாகி ஒருவர் மேடையேறி அவரை தாக்க முயன்றார்.

சீமான்

அப்போது அங்கு மோதல் ஏற்பட்டது. பின்னர் கீழே இருந்த மற்றொரு திமுக நிர்வாகி மேடையின் மீது உள்ளவர்கள் மீது நாற்காலியை தூக்கி எறிந்தார். அதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சீமான் அரசியலில் இது சாதாரணமப்பா என்று கூறியுள்ளார். அதன்படி திமுகவை எதிர்த்து நாங்கள் போராடுவோம்; எங்களை எதிர்த்து திமுக போராடும். அரசியலில் இது சாதாரணம் என்று சீமான் கூறினார்.

எதிர்ப்பு தெரிவிப்பது பெருமைதான், அரசியலில் இது சாதாரணமப்பா என கோவையில் செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்தார். தரக்குறைவாக பேசுவதாக எங்களை சொல்ல திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment