Connect with us

அடுத்த 3 மணி நேரத்தில்… 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!

rain

தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில்… 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரங்களுக்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து திருச்சி, கரூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என கூறியுள்ளது.

மேலும், செப்டம்பர் 4ஆம் தேதி வரையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top