அடுத்த 2 மணி நேரத்தில்… இந்த மாவட்டங்களில் மழை?

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

மிரட்டும் ‘மாண்டஸ்’ புயல்: நாளை இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடலூர், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கை: பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.