வேலைக்காரன் படத்தையே மிஞ்சிய செயல்; வெறும் மூன்றே நிமிடத்தில் 900 ஊழியர்களின் வேலை பறிபோனது!

கடந்த சில நாட்களாக உலகமெங்கும் ஜூம் மீட்டிங் அதிகம் நடைபெறுகிறது. குறிப்பாக பள்ளிகள் தொடங்கி பணிகள் வரை என அனைத்திற்கும் இந்த ஜூம் மீட்டிங் உபயோகமாக காணப்படுகிறது.

இதனால் வீட்டிலேயே இருந்து பல்வேறு அறிவுறுத்தல்கள், நேர்காணல் போன்றவைகளும் நடைபெற வசதியாக உள்ளது. இவ்வாறு பயன்களை அள்ளிக் கொடுத்து வரும் ஜூம் மீட்டிங்கில் அதிர்ச்சிகரமான பணி நீக்கம் நிகழ்ந்துள்ளது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அதன்படி அமெரிக்காவில் வெறும் மூன்றே நிமிடத்தில் ஜூம் மீட்டிங்கில் அட்டன்ட் பண்ண 900 ஊழியர்கள் பணி நீக்கப்பட்டனர். அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான பெட்டர் டாட் காம் நிறுவனத்தில் பணி புரிந்தவர்களை அது நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி விஷால் கார்க் பணி நீக்கம் செய்தார்.

அதன்படி இந்த கூட்டத்தில் இருக்கின்ற 900 ஊழியர்களுக்கு பணி நீக்கப்பட்டது என்று அவர் காணொளியில் கூறினார். இது எனது வாழ்நாளில் இரண்டாவது முறையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்றும் கூறினார்.

முதலாவது பணி நீக்கத்தின்போது நான் மிகவும் அழுதேன் என்றும் பெட்டர் டாட் காம் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி விஷால் கார்க் கூறினார். அவரின் இத்தகு நடவடிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment