இந்தியாவில் மட்டும் இவ்வளவு கோடியா? நேற்று வெளியான ஸ்பைடர்மேன் திரைப்படத்தின் வசூல்!

தற்போதுள்ள சினிமா உலகத்தில் மார்வெல் ஸ்டுடியோ மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி உள்ளது. குறிப்பாக மார்வெல் ஸ்டூடியோஸ் மூலம் வெளிவரும் ஒவ்வொரு படங்களும் உலக அளவில் வசூல் சாதனை புரிகின்றன.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் என்ற திரைப்படம் உலக அளவில் வெளியானது. நம் இந்தியாவிலும் இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால் இது ஒரு 3d திரைப்படமாகும்.

இதனால் இந்தியாவில் ஸ்பைடர் மேன் திரைப்படம் வெளியான ஒவ்வொரு திரையரங்குகளிலும் பார்வையாளர்களுக்கு 3டி கண்ணாடி வழங்கப்பட்டது. இந்த திரைப்படம் இந்தியாவில் வெளியாகி முதல் நாள் மட்டும் 32.67 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. ஸ்பைடர்மேன்  திரைப்படத்தை பார்த்து அனைவரும் நல்ல விதமான கருத்துக்களை மட்டுமே கூறி வருகின்றனர் என்பதும் ஸ்பைடர்மேன் திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment