Connect with us

16 மாவட்ட மக்களே உஷார்!! கொட்டப்போகுது கனமழை..

rain chennai4101 1638687228 1

தமிழகம்

16 மாவட்ட மக்களே உஷார்!! கொட்டப்போகுது கனமழை..

வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், உள்பட 17 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, திருச்சி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top