கடலூரில் ஐந்து மளிகை கடைகளை பூட்டை உடைத்து 80 ஆயிரம் திருடப்பட்டுள்ள சம்பவம் வணிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள், கடைகள், மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகிவற்றை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகாமையிலும், பெண் போலீஸ் வீட்டிலும், லட்சக்கணக்கான மதிப்பில் நகை மற்றும் பணம் திருடி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவத்தை போலீசார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் நேற்று நள்ளிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட்டில் ஒரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்களை திருடியவர்கள் அருகாமையில் இருந்த இரண்டு மளிகை கடையில் பூட்டை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து கடலூர் வண்டிபாளையத்தில் மீனாட்சி மளிகை கடையில் பூட்டை உடைத்த இரண்டு முகமூடி அணிந்த மர்ம நபர் நபர்கள் 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வசந்தராயன் பாளையத்தில் உள்ள மளிகை கடையில் பூட்டை உடைத்து கடையில் விழுந்த முப்பதாயிரம் பணம் மற்றும் பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல் கடை உரிமையாளர்கள் கடை திறப்பதற்கு சென்று பார்த்த போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
இதில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம் வணிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தத. இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் மோப்பநாய் உதவியுடன், கைரேகை நிபுணர்கள் வரவழைக்ப்பட்டும் சிசிடிவி வீடியோ காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு பேர் முகமூடி அணிந்து கொண்டு எந்தவித பயமும் இன்றி ஆஸ்வாசமாக பணத்தையும் பொருட்களையும் திருடி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் இடங்களில் முகமூடி கொள்ளையர்கள் தொடர்ந்து கொள்ளையடித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.