
Tamil Nadu
மீன் பிரியர்கள் ஷாக் !! காசிமேட்டில் மீன்கள் விலை தாறுமாறு உயர்வு ..
சென்னை காசிமேடு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பெரிய வகை மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இன்று பெளர்ணமி கொண்டாடப்படுவதால் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் வியாபாரிகள் பெருமளவில் குவிந்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ஏலம் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே மீன்பிடி தடைக்காலத்தினால் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால் மீன்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. குறிப்பாக வஞ்சர மீன் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 1,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
சங்கரா, நெத்திலி, வவ்வால் போன்ற மீன்களின் விலை ரூ. 700- ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் கடம்பா, இறால் போன்ற மீன்களின் விலை ரூ. 800 வரையில் உயர்ந்துள்ளது.
பாறை மீன் 400 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1000 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. நண்டு ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
