தமிழ்நாட்டில் யாருக்கும் ஒமைக்ரான் இல்லை; ஆனாலும் சென்னையில் 65% பேர் மாஸ்க் அணிவதில்லை!

இந்தியாவில் புதிதாக பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது ஒமைக்ரான். இந்த ஒமைக்ரான் முதலில் தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இப்போது வரை உலகில் உள்ள பல நாடுகளில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டு வருகிறது.

ராதாகிருஷ்ணன்

நம் இந்தியாவிலும் 32 பேருக்கு இந்த ஒமைக்ரான் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் தகவல் வெளியாகி இருந்தது. டெல்லியில் மேலும் ஒருவருக்கு இந்த ஒமைக்ரான் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் நம் தமிழகத்தில் தற்போது வரை யாருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் மருத்துவத் துறை செயலாளர் பல சோகமான தகவல்களை கூறியதாகக் காணப்படுகிறது. அதன்படி சென்னையில் 65 சதவீதம் பேர் மாஸ்க் அணிவது இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறையாத நிலையிலும் சென்னையில் 65 சதவீதம் பேர் மாஸ்க் அணிவது இல்லை என்று ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கும் ஒமைக்ரான் கண்டறியப்படவில்லை என்றும் மருத்துவத் துறை செயலாளர் கூறியுள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment