கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர்கள்! ஜனவரி 20ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை!!

இன்றைய தினம் தமிழகத்தில் அடுத்தடுத்து முக்கிய நிகழ்வுகள் நடந்து கொண்டே வந்தன. ஏனென்றால் இன்று காலை தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சில மணிநேரங்களுக்கு முன்பு தமிழக அரசு நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டது. நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு மீண்டும் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு நர்சரி பள்ளிகள் செயல்படும் தடைவிதித்துள்ளது. பிளே ஸ்கூல், எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட நர்சரிப் பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அதிலும் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தலாம் என்றும் முதலமைச்சர் அனுமதி அளித்திருந்தார்.

10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு தயாராக உள்ளதால் அவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடரும் என்று முதலமைச்சர் கூறினார். பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment