அதிமுக பொதுக்குழு வழக்கில் திடீர் திருப்பம்!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையானது நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் முன் இன்றைய தினத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பல்வேறு விதமான விளக்கங்களை கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேவைப்பட்டிருக்காது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆசாமி.. ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி!

அதே போல் இபிஎஸ் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது அதிமுக சட்டவிதிகளுக்கு முரணானது என கூறியுள்ளார். இதற்கிடையில் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட இருவரும் இணைந்து முடிவு எடுத்தாக இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அதிமுகவில் ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் இருக்கக்கூடிய கட்சியில் வெறும் 2,500 பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவை எப்படி அங்கீகரிப்பது? என்ற கேள்வியை ஓபிஎஸ் தரப்பினர் எழுப்பினர்.

காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்.. திருப்பூரில் பயங்கரம்!

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளார். மேலும், இந்த வாரமே வழக்கினை முடித்துவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.