Connect with us

4 மாதத்தில் ஆர்டர்லியை ஒழிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!!

high court

தமிழகம்

4 மாதத்தில் ஆர்டர்லியை ஒழிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!!

ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

காவல்துறையில் பணியாற்றி வந்த மாணிக்கவேல் என்பவர் வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றம் செய்த போதிலும் ஏற்கனவே வசித்து வந்த காவல்துறையினர் குடியிருப்பு வீட்டை காலி செய்யாத காரணத்தினால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீஸ்ஸை எதிர்த்து மாணிக்கவேல் தாக்கல் செய்த வழக்கை  விசாரித்த நீதிபதி, காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி முறைகளை அமைப்பது, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது, சொந்த வாகனங்களில் அரசு முத்திரை வைத்திருப்பது போன்ற விவகாரங்களை விசாரித்தார்.

இந்நிலையில் வழக்கைப் பொறுத்தவரையில் கடந்த வாரம் டிஜிபி தாக்கல் செய்த அறிக்கையில் 1979-ம் ஆண்டு தமிழக அரசு ஆர்டர்லி முறையை ஒழிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் 1979-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, தற்போது ஆர்டர்லி பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்று பணிகள் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.  அதோடு 4 மாதங்களில் ஆர்டர்லி முறைகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் இருக்கக்கூடிய ஆர்டர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top