2021ல் இந்தியாவில் 126 புலிகள் உயிரிழப்பு! வேட்டை, மக்களின் தாக்குதல் 60 புலிகள் பலி!!

நம் இந்தியாவின் தேசிய விலங்காக காணப்படுகிறது புலி. ஆனால் புலியோ அழியப்படும் விலங்குகளின் வரிசையில் காணப்படுவது மிகுந்த வருத்தமளிப்பதாக காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 126 புலிகள் உயிரிழந்திருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களை புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த 126 புலிகளில் 60 புலிகள் மக்களின் தாக்குதல், வேட்டை, விபத்துக்களின் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

524 புலிகளைக் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் 41 புலிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 312 புலிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 25 புலிகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

534 புலிகளை கொண்ட கர்நாடகாவில் 15 புலிகள் உயிரிழந்துள்ளன. 173 புலிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் 9 புலிகள் உயிரிழந்துள்ளன. இந்தியாவில் 2016ஆம் ஆண்டு 121 புலிகள் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஆண்டு அதிக அளவாக 126 புலிகள் உயிரிழந்துள்ளன. அடர்ந்த வனத்திற்குள் மேலும் பல புலிகள் இருக்கலாம் என்பதால் எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment