ஒரு ஸ்மார்ட் போன் வாங்குனதுக்கு இம்புட்டு அலப்பறையா? என்னென்ன பண்றாங்க பாருங்க…!

பொதுவா திருமணம் அல்லது வேறு ஏதேனும் விசேஷம் என்றால் தான் நாம் குதிரை அல்லது ஆடம்பர சொகுசு காரில் ஊர்வலமாக செல்வோம். அதுவும் மிக குறைவானவர்கள் தான் இதுபோன்ற ஊர்வலங்களை நடத்துவார்கள். ஆனால் முதல் முறையாக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியதற்கு குதிரை ஊர்வலம் சென்ற செய்தியை கேட்டுருக்கீங்களா?

ஆமாங்க குடும்பத்துல முதல் முறையா ஸ்மார்ட் போன் வாங்குனது ஊருக்கே தெரியனும்னு பட்டாசு வெடிச்சு ஊர்வலம் போயிருக்காரு ஒரு டீக்கடைக்காரர். ஆனா நம்ம ஊர்ல இல்லை. இதெல்லாம் நம்ம ஊர்ல நடந்திருந்தா ஏன்டா ஒரு போன் வாங்குனதுக்கு இம்புட்டு அலப்பறையானு கேட்டு சிரிச்சிருவானுங்க.

மத்தியபிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் தேரீர் விற்று பிழைப்பு நடத்தி வரும் முராரி குஷ்வாஹா என்ற நபர் தனது வருமானத்தில் சிறிது சிறிதாக சேர்த்து அவரது மகள் ஆன்லைன் வகுப்பு படிப்பதற்காக ஸ்மாட்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

முராரி குடும்பத்தில் ஒருவருக்கு ஸ்மார்ட்போன் வாங்கி தருவது இதுவே முதல்முறையாம். அதனால் ஆட்டம் பாட்டம் என குதிரை மீது ஊர்வலமாக சென்று மகளுக்கு அந்த போனை வழங்கியுள்ளார். அதுமட்டுமல்ல தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வேற வைத்துள்ளாராம்.

தொடர்ந்து இதுகுறித்து பேசிய முராரி குஷ்வாஹா, “என் மகளுக்கு ரூ.12,500 மதிப்புடைய ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்தேன். என் குடும்பத்தில் ஸ்மார்ட்போன் வாங்குவது இதுவே முதல்முறை. இந்த நிகழ்வை ஊர் முழுவதும் அறிய வேண்டும் என்பதற்காக இசை வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடித்து கொண்டாடியபடி குதிரை மீது ஊர்வலமாக சென்றேன்” என கூறியுள்ளார்.

அவரு போன் வாங்குன செலவ விட அதுக்காக செஞ்ச செலவு தான் அதிகமா இருக்கும் போல. எது எப்படியோ இந்த ஆடம்பரத்தை அவர் தவிர்த்திருக்கலாம் என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment