அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை உடனடியாக மேம்படுத்துக! மறைமுகமாக ஆளுநர் நீட் தேர்விற்கு ஆதரவா?
தொடர்ச்சியாக நம் தமிழகத்தில் அரசு பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவை தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் வரிசையாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தின் ஆளுநர் ரவி அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டியது நம் அவசர தேவை என்றும் ஆளுநர் ரவி கூறினார்.
அரசு தனியார் பள்ளிகளுக்கு இடையே எதிர்மறையான வேறுபாடுகள் நமக்கு கவலையை தோற்றுவிக்கின்றன என்றும் ஆளுநர் கூறினார். நீட் தேர்வுக்கு முன் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்தனர் என்றும் ஆளுநர் கூறினார்.
மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு காரணமாக மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும் ஆளுநர் ரவி கூறினார்.
தனியார் பள்ளிகளில் ஏழைகளால் சேர முடியாது அரசு பள்ளிகள் மட்டுமே அவர்களுக்கு நம்பிக்கை என்றும் ஆளுநர் ரவி கூறினார். குடியரசு தினம் நாளை நடைபெற உள்ள நிலையில் அரசு பள்ளிகளின் தரத்தை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
