சென்னை வானிலை மைய செயல்பாட்டை மேம்படுத்துக!: முதல்வர் ஸ்டாலின் கடிதம்;

இரண்டு நாட்களுக்கு முன்பு நம் தலைநகர் சென்னையில் எதிர்பாராதவிதமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதன் விளைவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புவியரசன் வளிமண்டல சுழற்சியை கணிக்கத் தவறி விட்டோம் என்று விளக்கம் அளித்திருந்தார்.

புவியரசன்

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை வானிலை மையம் செயல்பாட்டை மேம்படுத்த கோரி கடிதம் எழுதியுள்ளார். சென்னை வானிலை மைய செயல்பாட்டை மேம்படுத்த கோரி அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பெருமழை, புயல் போன்ற ரெட் அலார்ட் சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே கூற மேம்படுத்துவது அவசியம் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின்

வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பை மேம்படுத்தி தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்த கூடுதல் முதலீடு தேவை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை தர போதுமான திறன் சென்னை வானிலை மையத்தில் குறைபாடாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வானிலை  மையத்தின் குறைபாட்டால் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை நிலவுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பெருமழை, புயல் போன்றவற்றை எதிர்கொள்ள வானிலை ஆய்வு மைய அறிக்கையை மாநில அரசு சார்ந்து உள்ளது.

ஆனால் பெரு மழை குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் வழங்க இயலாத நிலைதான் உள்ளது என்றும் கூறியுள்ளார். வானிலை மைய அறிவிப்புக்கு மாறாக சென்னையில் டிசம்பர் 30-ஆம் தேதி பெய்த அதிகனமழையை சுட்டிக்காட்டிய கடிதம் எழுதியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment