விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: கூறுவது மத்திய அரசு; 7 நாள் வீட்டு தனிமை கட்டாயம்!

நம் நாட்டில் டிசம்பர் மாதம் முதல் ஒமைக்ரான் அதிகமாக பரவிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனாவின் பாதிப்பும் மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு விமான நிலையங்களிலும் பரிசோதனை மையங்கள், கட்டுப்பாட்டு அறைகள் என அனைத்தும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

விமானங்களில் இருந்து பயணம் செய்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் முடிவும் வெளியிடப்பட்டு வருகிறது. ஆயினும் அதிகமான விமான பயணிகள் மத்தியிலும் ஒமைக்ரான் மற்றும் கொரோனாவின் பாதிப்பும காணப்படுவது பெரும் துன்பத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து வந்தால் ஏழு நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம் என்று அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து விமான போக்குவரத்து சேவையின் மூலம் வரும் பயணிகள் அனைவரும் கட்டாயம் ஏழு நாட்கள்வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஏழு நாள் வீட்டு தனிமைக்கு பின்னர் எட்டாவது நாள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment