திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நாளை முதல் இதற்கு தடை..!!

இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்றாக கருதப்படுவது திருப்பதி ஏழுமலையான் கோயில். இந்த கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்துசெல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் விடுமுறை நாட்கள் நெருங்கி வருவதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது திருப்பதி மலைப்பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையை கருட சேவை நாளை மறுநாள் இரவு நடைபெற இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், கருட சேவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment