#Breaking 10,11,12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு… வெளியானது முக்கிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் தனி செய்பவர்கள் விண்ணப்பிக்க டிசம்பர் 26ம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் டிசம்பர் 31 ஜனவரி 1 ஆகிய சனி ஞாயிறு தேதிகளை தவிர மற்ற தேதிகளில் அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் ஜனவரி 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வு கட்டணத்துடன் பத்தாம் வகுப்புக்கு 500 ரூபாய் கூடுதலாகவும் மேல்நிலை வகுப்புகளுக்கு 1000 ரூபாய் கூடுதலாகவும் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத கட்டணம் 125 ரூபாயும் ஆன்லைன் பதிவு கட்டணம் 50 ரூபாயும் பெறப்படும். 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு தேர்வு கட்டணம் 150 ரூபாய், இதர கட்டணம் 35 ரூபாய், ஆன்லைன் பதிவு கட்டணம் 50 ரூபாய் என மொத்தம் 235 ரூபாய் பெறப்படும்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் 11மற்றும் 12 வகுப்புக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுகளுக்குள் அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் வாயிலாக அதே நாட்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.