Connect with us

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: 8 ரயில்கள் தற்காலிகமாக ரத்து!-தெற்கு ரயில்வே;

chennai train

செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: 8 ரயில்கள் தற்காலிகமாக ரத்து!-தெற்கு ரயில்வே;

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: 8 ரயில்கள் தற்காலிகமாக ரத்து!-தெற்கு ரயில்வே;

செலவு குறைவாகவும் விரைவு பயணமாகும் காணப்படும் போக்குவரத்து சேவையாக உள்ளது ரயில் போக்குவரத்து. இந்த நிலையில் தற்போது 8 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

ரயில் சேவைகளை இயக்குவதில் எழுந்துள்ள சில பிரச்சினைகள் காரணமாக 8 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது தெற்கு ரயில்வே. அதன்படி திருவனந்தபுரம் தொடங்கி நாகர்கோவில் விரைவு ரயில் (06435) இன்று முதல் வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் தொடங்கி கோட்டயம் தினசரி விரைவு ரயில் (12336) இன்று முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. கோட்டையம் தொடங்கி கொல்லம் விரைவு ரயில் (06431) சேவை மற்றும் கோட்டையும் தொடங்கி நாகர்கோவில் விரைவு ரயில் (16366) சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சர்வாட்டூர் தொடங்கி மங்களூர் விரைவு ரயில் (06491) , கண்ணனூர் தொடங்கி சர்வாட்டூர் ரயில் (06469) ரயில் சேவைகளும் இன்று முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மங்களூர் தொடங்கி கோழிக்கோடு விரைவு ரயில் (16610) மற்றும் கோழிக்கோடு தொடங்கி கண்ணூர் விரைவு ரயில் (06481) சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top