புதுச்சேரி மாணவர்களுக்கு முக்கிய செய்தி: மீண்டும் தொடங்கியது ஆன்லைன் வகுப்புகள்

எதிர்பாராதவிதமாக இந்தாண்டு தொடங்கியதுடன் கொரோனா பாதிப்பும் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. இதன் விளைவாக ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவின் பாதிப்பு லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 20ஆம் தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புமுறை கிடையாது என்றும் அறிவித்துள்ளது. இதனை போல் புதுச்சேரி மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

online

இதனை புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மறு தேதி அறிவிப்பு வரும் வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் நாளை 10.01. 2022 திங்கள்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் விடுமுறை நாட்களில் இணைய வழிக் கல்வி மூலம் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment