Connect with us

குழந்தைகளே உங்களுக்கான செய்தி.! மார்ச் 25-ஆம் தேதி தான் கடைசி நாளாம்?

School Children in TamilNadu

தமிழகம்

குழந்தைகளே உங்களுக்கான செய்தி.! மார்ச் 25-ஆம் தேதி தான் கடைசி நாளாம்?

குழந்தைகளே உங்களுக்கான செய்தி.! மார்ச் 25-ஆம் தேதி தான் கடைசி நாளாம்?

முதலில் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதனால் பலரும் பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த உள்ளதாக கூறியிருந்தது.

அதன்படி நம் இந்தியாவில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதலே சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான முன்பதிவு ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு அன்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பள்ளி மாணவர்கள் வரிசையாக தங்களது ஆதார் அட்டை அல்லது அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி செய்துகொள்கிறார்கள். இந்நிலையில் 12 முதல் 14 வயதுக்குள் சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசியினை செலுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு நாளை முதல் மார்ச் 25ஆம் தேதி வரை தடுப்பூசியை செலுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top