Connect with us

போதைப்பொருள் ஒழிப்பு!!! தமிழக முதல்வர் முக்கிய முடிவு!!!

stalin new16

தமிழகம்

போதைப்பொருள் ஒழிப்பு!!! தமிழக முதல்வர் முக்கிய முடிவு!!!

தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் தமிழக முதல்வர் சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது பேசிய தமிழக முதல்வர் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் போதை மருந்துகள் தமிழகத்தின் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதேபோல் போதைக்கு அடிமையானவர்களை மீட்டு நல்வழி படுத்த வேண்டும் என்றும் புதிதாக போதைபொருள் பயன்படுத்துபவர்களை தடுக்கும் விதத்தில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இத்தனைய உறுதியை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதோடு போதைப்பொருள் போன்ற எதிர்மறையான விஷயங்களில் தமிழகம் வளர்ந்து விடக்கூடாது என கூறியுள்ளார்.

மேலும், போதைப்பொருள் ஒழிப்பில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடம் நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top