
தமிழகம்
மின்சாரத் துறையில் முக்கிய அறிவிப்பு: சுடிதார் அணிந்து பெண்கள் பணியாற்ற அனுமதி!!
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம்மாறி அனைத்து துறைகளிலும் ஆண்களை மிஞ்சும் அளவிற்கு பெண்கள் பணியாற்றிக் கொண்டு வருகின்றனர். அதிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் பெண்களின் கல்வி தரம் மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கைத் தரமும் மெல்ல மெல்ல உயர்ந்துள்ளது என்று தெரிகிறது. இதையெல்லாம் தாண்டி மின்சாரத்துறையிலும் பெண் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர்களின் சீருடை பற்றி சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இபி ஊழியர்கள் சீருடை அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளை பின்பற்றாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் பணியில் உள்ள மின்சார வாரிய பெண் ஊழியர்கள், சேலை, சால்வர், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து பணியாற்றலாம் என்றும் மின்வாரியம் கூறியுள்ளது. இத்தகைய அறிவிப்பு பெண்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளதாக காணப்படுகிறது.
