திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு !! என்ன தெரியுமா?
இந்தியாவில் பணக்கார கோவிலாக கருதப்படுவது திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்களுக்கு திருப்பதி செல்வதற்கு சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் தொடர்பாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதனிடையே வருகின்ற 21-ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் 21-ம் தேதியும், மே மாதத்திற்கான டிக்கெட் 22-ம் தேதியும், ஜூன் மாத டிக்கெட் மார்ச் 23-ம் தேதியும் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் திங்கள் முதல் புதன் வரை நாளொன்றுக்கு 30,000 டிக்கெட்டுகளும் வியாழன் முதல் ஞாயிறு வரை 25 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட இருப்பது குறிப்பிட்டத்தக்கது.
