திருப்பதி பக்தர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ..! என்ன தெரியுமா ?
இந்தியாவில் பணக்கார கோவில்களில் ஒன்றாக திகழ்வது திருப்பதி ஏழுமலையான் கோயில். இந்த கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஆர்ஜித சேவை 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த சூழலில் ஆர்ஜித சேவை குலுக்கல் முறையில் முன்பதிவு இன்று முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பதிவு செய்ய சிஆர்ஓ அலுவலகத்தில் பக்தர்கள் காலை 11 முதல் மாலை 5 மணி வரையில் ஆதார் அட்டை அடிப்படையில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம் நகல் வழங்கப்பட்டு தானியங்கி ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் மாலை 6 மணிக்கு டிக்கெட்டுகளை வாங்கிகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஏற்கனவே முன்பதிவு செய்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை வாங்கி கொண்ட பக்தர்கள் ஆர்ஜிதம் அலுவலகத்தில் இரவு 8 மணிக்குள் டிக்கெட்களை காண்பித்து வருகையை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்யாத பக்தர்கள் இரவு 8.30 மணிக்கு 2வது முறை குலுக்கல் செய்யப்பட்டு மற்ற பக்தருக்கு ஒதுக்கீடு செய்யதாக கூறியுள்ளது. மேலும், நாளை வெள்ளிக்கிழமை என்பதால் ஏழுமலையானுக்கு அபிஷேகம் நடைபெறும். இதன் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்காமல் அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
