திருப்பதி பக்தர்களுக்கு முக்கியமான அறிவிப்பு : தேவஸ்தானம் அதிரடி !!

ஆந்திர மாநிலத்தின் சிறப்பம்சம்சமாக  கருதப்படுது  திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவில்  இந்தியாவில் பணக்கார கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

கொரோனா தொற்றின் காரணமாக இந்த கோவிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் அங்கபிரதட்சணம் செய்ய அனுமதிக்கு  தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனாவின் தாக்கமானது படிபடியாக குறைந்து கொண்டு வருவதால் தற்போது அங்கப்பிரதட்சணம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவுறுத்தி இருந்தது.

இதனிடையே வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.ஏ.சி.-1ல் பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் வழக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

அதன்படி முந்தைய தினம் அங்கப் பிரதட்சணம் டிக்கெட் பெறும் பக்தர்களுக்கு மறுநாள் அதிகாலை ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment