திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! என்ன தெரியுமா?

உலக அளவில் மிகவும் பிரசித்திபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் சீனாவில் பரவி வரும் பிஏஃப்.7 வகை கொரோனா இந்தியாவிலும் கால் பதித்துள்ளது.

எம்மாடியோ!! ஒரு கிலோ மல்லிகைப்பூ 3,600 ரூபாயா?

இதன் காரணமாக விமான நிலையம் போன்றவற்றில் பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, ஜனவரி 1 முதல் 11-ம் தேதி வரையில் சிறப்பு தரிசனத்திற்கு முன் பதிவு செய்பவர்கள், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

பயணிகள் கவனத்திற்கு! பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து!!

மேலும், அன்றைய தினத்தில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விற்பனையானது இன்று காலை 9 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.