தமிழில் கையெழுத்து போடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்சியல் தமிழில் எழுதலாம்!!

பொதுவாக நாம் பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் என பலவற்றிலும் பெயர் எழுதுவது வழக்கமாகவும் கட்டாயமாகவும் காணப்படும். நாம் எழுதும்  பெயரில் நமது இன்சியல் ஆக தந்தை அல்லது தாய், அல்லது கணவரின் முதல் எழுத்தினை எழுதுவோம்.

இவ்வாறு எழுதும் இன்சியலில் பெரும்பாலும் ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்துவோம். இந்த நிலையில் இனி தமிழிலும் இன்சியல்களை எழுதலாம் என்று அரசாணை தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி பள்ளி, கல்லூரி உள்ள ஆவணங்கள் அனைத்திலும் இனி தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழில் எழுத தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இது குறித்து சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் தமிழில் கையெழுத்து இடும் பலரும் பயன்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment