தமிழகம்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! என்ன தெரியுமா ?
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான பாடவாரியான அட்டவணைகளும் சமீபத்தில் பள்ளிக்கல்விதுறை அறிவித்தது. இதனிடையே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.
இதற்கிடையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தேர்வுத்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நேற்று முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் செய்முறை தேர்வு எழுதி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை தெரிவித்தது.
இந்த சூழலில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுதும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
