ஸ்னாக்ஸ் பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நிதிஆய்வு தகவல்!!
உடல் பருமனை குறைக்க ஜிம்முக்கு செலவு, தீவிர உடற்பயிற்ச்சி என பலரும் முயற்சி செய்யும் நிலையில் புதிய வழியினை மத்திய அரசு திட்டமிட ஆலோசனை அமைப்பான நிதிஆய்வு கண்டுபிடித்து உள்ளது.
அந்த வகையில் அண்மையில் வெளிவந்துள்ள நிதி ஆய்வு அறிக்கையில் இந்தியர்களிடையே அதிகரித்து வரும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
அதன்படி உடலுக்கு தீங்கு தரக்கூடிய தின்பண்டங்கள் பயன்பாட்டை குறைப்பதற்காக ஆலோசிக்கப்பட்டது. அதன் விளைவாக சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகிய தின்பண்டங்களுக்கு கூடுதல் வரி விதிக்கலாம் என அரசுக்கு நிதி ஆய்வு ஆலோசனை தெரிவித்துள்ளது.
பிராண்ட் அல்லாத காரவகைகள், உப்பு மிகுந்த சிப்ஸ் ஆகியவற்றிற்கு தற்போது ஜிஎஸ்டி 5%. இதுவே பிராண்ட் தயாரிப்பு என்றால் 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படிகிறது.
இதனை மேலும் அதிகரிக்க அரசுக்கு நிதி ஆய்வு பரிந்துரை செய்வதாக தெரிகிறது. அதாவது சின் டக்ஸ் எனப்படும் பாவ வரி உடல்நிலைக்கு தீங்கான மதுபானங்களுக்கு விதிக்கப்படுகிறது.
இதன் மூலன் அதன்பயன்பாட்டை குறைக்கவோ, கைவிடவோ செய்வதுதான் இதன் நோக்கம். அந்த வகையில் உடலுக்கு தீங்கு தரக்கூடிய சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகிய தின்பண்டங்களுக்கு கூடுதல் வரி விதிக்க நிதி ஆய்வு பரிந்துரை செய்கிறது.
