Connect with us

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு: நம்பத் தகுந்த இடங்களில் டிக்கெட் பெற வேண்டும்!

ukraine india

செய்திகள்

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு: நம்பத் தகுந்த இடங்களில் டிக்கெட் பெற வேண்டும்!

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு: நம்பத் தகுந்த இடங்களில் டிக்கெட் பெற வேண்டும்!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி கொண்டு வருகிறது. குறிப்பாக உக்ரைனில் இரஷ்யா தனது படைகளை குவித்து வைத்துள்ளது. இதனால் ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. அதன் பின்னர் நேற்று G7 நாடுகள் அனைத்தும் ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்தது.

இதனால் உக்ரைன் நாட்டில் இருந்து தங்கள் நாடுகளுக்கு திரும்ப ஒவ்வொரு நாடும் அறிவித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவும் உக்ரைனில் இருந்து நாடு திரும்புவதற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

உக்ரைனில் நம்பத்தகுந்த இடங்களில் இருந்து விமான டிக்கெட் பெற வேண்டும் என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்ப போதிய அளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

உக்ரேனில் இருந்து ஷார்ஜா, துபாய், தோஹா வழியாக இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது. உக்ரைனுக்கான இந்திய தூதரகத்தின் ட்விட்டர், முகநூல் பக்கங்களில் தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top