ஐயப்பன் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இன்று சபரிமலை நடை திறப்பு!!
நம் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டான நெருங்கி விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் கொடி ஏற்றம் ஏற்றப்பட்டுள்ளது. இந்த மாதம் 14ஆம் தேதி நம் தமிழகமெங்கும் சித்திரை ஒன்றாம் நாள் தமிழ் திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் தற்போது சபரிமலை நடை இன்று திறப்பு விழா அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சித்திரை விஷூ நெருங்கியதால் இன்று நடை திறக்கப்படுகிறது. அதன்படி சித்திரை விஷு பண்டிகை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 15ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுகள் நடைபெற உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்பட்டு நாளை அதிகாலை மீண்டும் நடை திறக்கப்படும் போது பக்தர்களுக்கு அனுமதி என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
