Connect with us

’மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!’ வானிலை மையம் எச்சரிக்கை..

மழை-மீனவர்

தமிழகம்

’மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!’ வானிலை மையம் எச்சரிக்கை..

’மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!’ வானிலை மையம் எச்சரிக்கை..

தமிழகத்தில் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதியானது தற்பொழுது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுவதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் வருகின்ற 19 தேதி முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் 17.03.2022,18.03.2022: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடல் சீற்றதுடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top