விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! என்ன தெரியுமா?
ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த மூன்று வாரங்களாக கடுமையான போர் நிலவி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இதனால் இந்தியாவில் அத்தியாவச பொருட்களின் விலையினை தொடர்ந்து பங்குசந்தையும் கடும் சரிவை கண்டுள்ளது.
இந்த நிலையில் விமானங்களில் ஜெட் என்ற எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யா- உக்ரைன் போர் எதிரொலியாக ஜெட் எரிவாயுவின் விலையானது தற்போது 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக விமான எரிபொருள் விலையின் மதிப்பானது 17,000 உயர்துள்ளதாக ஏர் இந்தியா, இன்டிகோ போன்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் விமான டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த எரிபொருட்களின் விலையானது டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.1,10,666.29 ஆகவும், இந்த உயர்வு முந்தைய விலையை விட ரூ.17,135.63 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
