
தமிழகம்
10,12 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! என்ன தெரியுமா?
கடந்த மாதம் தமிழகத்தில் இருக்கும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 தேதி வெளியாகியது.
அதன் படி, முதலில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் பின்னர் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியது. இந்த தேர்வில் 12-ஆம் வகுப்பில் 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதே போல் 10-ஆம் வகுப்பில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இதில் மாணவிகள் 94.38% என்றும் மாணவர்கள் 85.83% தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக காலை 11 மணி முதல் பள்ளிகள் அல்லது www.deg.tn.nic.in என்ற இணையம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என அரசு கூறியுள்ளது.
