மிஸ்கின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது பொதுவாக பேய் படம் என்றால் பார்வையாளர்களை பயமுறுத்தும். ஆனால் இந்த படத்தில் அன்பான பேய் வந்தது மிஷ்கினின் வித்தியாசமான கோணத்தை வெளிப்படுத்தியது என்றே கூறலாம்
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து ’பிசாசு 2’ படத்தின் அறிவிப்பை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மிஸ்கின் வெளியிட்டார். மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் சற்று முன்னர் ஆண்ட்ரியா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’பிசாசு 2’படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராக்போர்ட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
#Pisasu2 Shoot Started Today@DirectorMysskin @Rockfortent @andrea_jeremiah #Karthikraja @Lv_Sri @kbsriram16 @APVMaran @santhakumar_dop @teamaimpr pic.twitter.com/5Sl5TkCgCV
— Andrea Jeremiah (@andrea_jeremiah) January 29, 2021