Connect with us

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு: எப்பொழுதும் போல போனால் தேர்வு எழுத முடியாது!

123

தமிழகம்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு: எப்பொழுதும் போல போனால் தேர்வு எழுத முடியாது!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு: எப்பொழுதும் போல போனால் தேர்வு எழுத முடியாது!

இன்று மதியம் டிஎன்பிஎஸ்சி தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது குரூப் 2m குரூப் 2A தேர்வு தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி மே 21ம் தேதி சனிக்கிழமை குரூப்-2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 23ஆம் தேதி முதல் மார்ச் 23-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார். இந்த ஆண்டு குரூப் 2 தேர்வு மூன்று கட்டமாக நடைபெற உள்ளது என டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார்.

நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 2, குரூப் 2A என மொத்தம் 5529 காலியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்வர்களுக்கு கவனம் அளிக்கும் தகவல் ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி இதுவரை காலை 10 மணிக்கு தொடங்கிய குரூப் தேர்வுகள் இனிய 09:30 மணிக்கு தொடங்கி 12:30 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

மே மாதத்தில் நடைபெறும் குரூப்-2 தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். பிற்பகல் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் இடமும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசு நிறுவனங்கள் மற்றும் வாரியான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு டிஎன்பிஎஸ்சி நடத்தும் என்றும் பாலச்சந்திரன் கூறினார். பணி  விவரங்களை வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

மார்ச் 3ஆம் தேதியில் இது குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்றும் பாலச்சந்திரன் கூறினார். 100 கேள்வி பாடத்திலும், 75 கேள்விகள் பொதுஅறிவு, 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் என்றும் கூறினார்.

300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் ,90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள் என்றும் கூறினார். தேர்வின்போது கருப்பு மை கொண்ட பேனா ,ஜெல் பேனா, பால்பாயிண்ட் பேனா இவற்றை பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top